சீனா மீதான வரி 10% குறைப்பு! டிரம்ப் - ஜின்பிங் சந்திப்பின் முழு விவரம்!!

அமெரிக்க அதிபர் டிரம்ப் - சீன அதிபர் ஸி ஜின்பிங் பற்றி...
Trump - Xi Jinping Meeting highlights
அமெரிக்க அதிபர் டிரம்ப் - சீன அதிபர் ஸி ஜின்பிங் சந்திப்பு.AP
Published on
Updated on
2 min read

அதிபர் ஜின்பிங்குடனான சந்திப்பிற்குப் பிறகு, சீனப் பொருள்கள் மீதான வரியை 10% குறைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு டிரம்ப், பல்வேறு நாடுகளின் மீது வரி விதிப்பு நடவடிக்கை மேற்கொண்டார். இது உலக நாடுகளின் வர்த்தகத்தை பெரிதும் பாதித்தது.

இந்நிலையில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் டிரம்ப், வர்த்தக பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறார்.

சீன அதிபர் ஜின்பிங்குடன் ஏற்கெனவே தொலைபேசியில் பேசி வந்த டிரம்ப், இன்று தென்கொரியாவில் உள்ள புசான் நகரில் அதிபர் ஸி ஜின்பிங்கை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.

இரு நாட்டுத் தலைவர்களும் நீண்ட நேரம் வர்த்தகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் பல முக்கிய முடிவுகள் எடுத்துள்ளதாகக் கூறியுள்ளனர்.

இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்தபோது, 'உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி' என்று ஜின்பிங் கூறியுள்ளார். இந்த சந்திப்பு வெற்றிகரமானதாக அமைய வேண்டும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

பேச்சுவார்த்தையின்போது அமெரிக்காவும் சீனாவும் நண்பர்களாக இருக்க வேண்டும் என்றும் ஜின்பிங் வலியுறுத்தினார்.

"அமெரிக்காவும் சீனாவும் அடிக்கடி நேரில் சந்தித்துக்கொள்ளவில்லை என்றாலும் அவர்கள் கூட்டாளிகளாகவும் நண்பர்களாகவும் இருக்க வேண்டும். உலக பொருளாதாரத்தை மேம்படுத்த சீனாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட வேண்டும். இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டால் சில விஷயங்களை சாதிக்க முடியும். சில வேறுபாடுகள் இருப்பது சாதாரணம்தான். இரு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையே அவ்வப்போது உராய்வுகள் ஏற்படுவது இயல்பானது" என்றார்.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு சீன அதிபர் ஜின்பிங்குடனான சந்திப்பு மிகப்பெரிய வெற்றியாக அமைந்ததாக கூறிய டிரம்ப், சீனா மீதான வரியை 10% குறைப்பதாக அறிவித்துள்ளார்.

'சீனாவுடன் மேலும் பேச்சுவார்தைகளுக்காக வருகிற ஏப்ரல் மாதம் சீனா செல்கிறேன். அதன் பின்னர் சீன அதிபரும் அமெரிக்காவிற்கு வருகிறார். புளோரிடா, பாம் பீச், வாஷிங்டனில் இந்த சந்திப்பு நடக்கலாம். பல விஷயங்களில் இன்று முடிவெடுத்திருக்கிறோம். சீனாவுக்கு கணினி சிப்ஸ்களை ஏற்றுமதி செய்வது குறித்தும் விவாதித்தோம். அனைத்து விஷயங்களையும் பேசி முடித்துவிட்டோம் என்று கூற முடியாது. ஆனால் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகலாம். இனி பெரிய தடைகள் எதுவும் இல்லை. ஜின்பிங், நாட்டின் சக்திவாய்ந்த தலைவர்' என்றும் டிரம்ப் கூறினார்.

ஸி ஜின்பிங் கூறுகையில், "சீனா மீதான வரி, 57 சதவீதத்திலிருந்து 47 சதவீதமாகக் குறைக்கப்படுவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். சீனா உடனடியாக அமெரிக்காவிலிருந்து சோயாபீன்ஸ் வாங்கத் தொடங்கும். மிகப்பெரிய பிரச்னையாக இருந்த, அரிய வகை மண் ஏற்றுமதி பிரச்னை தீர்க்கப்பட்டுவிட்டது. இனி சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு மண் ஏற்றுமதியில் எந்தத் தடைகளும் இருக்காது" என்று தெரிவித்தார்.

ஃபென்டனைல் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ரசாயனங்களை சீனா விற்பனை செய்ததற்காக தண்டனையாக அமெரிக்கா இந்த கூடுதல் வரியை விதித்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Trump - Xi Jinping Meeting highlights

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com