அமெரிக்காவும் சீனாவும் நண்பர்களாக இருக்க வேண்டும்! - சீன அதிபர் ஜின்பிங்

அமெரிக்க அதிபர் டிரம்ப் - சீன அதிபர் ஸி ஜின்பிங் பற்றி...
Trump met with President Trump in Busan, South Korea
அமெரிக்க அதிபர் டிரம்ப் - சீன அதிபர் ஸி ஜின்பிங் சந்திப்பு.
Published on
Updated on
1 min read

அமெரிக்காவும் சீனாவும் நண்பர்களாக இருக்க வேண்டும் என சீன அதிபர் ஸி ஜின்பிங் கூறினார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியேற்ற பிறகு இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் மீது கூடுதல் வரி விதிப்பை மேற்கொண்டார்.

இந்நிலையில் தற்போது சீனாவுடனான உறவை மேம்படுத்தும் முயற்சிகளில் அதிபர் டிரம்ப் ஈடுபட்டு வருகிறார். இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தென்கொரியாவில் புசான் நகரில் சீன அதிபர் ஸி ஜின்பிங்கை அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தித்துப் பேசினார். நீண்ட நேரம் இரு நாட்டுத் தலைவர்களும் பேசியதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திப்பில் இரு நாட்டுத் தலைவர்களும் கைகுலுக்கி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.

'உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி' என்று ஜின்பிங் கூற, பதிலுக்கு டிரம்ப், 'ஜின்பிங் கடுமையான பேச்சுவார்த்தையில் ஈடுபடுபவர்(பேரம் பேசுபவர்). இது வெற்றிகரமான சந்திப்பாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்' என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து, அமெரிக்காவும் சீனாவும் நண்பர்களாக இருக்க வேண்டும் என்று ஜின்பிங் கூறினார்.

"அமெரிக்காவும் சீனாவும் அடிக்கடி நேரில் சந்தித்துக்கொள்ளவில்லை என்றாலும் அவர்கள் கூட்டாளிகளாகவும் நண்பர்களாகவும் இருக்க வேண்டும். உலக பொருளாதாரத்தை மேம்படுத்த சீனாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட வேண்டும். இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டால் சில விஷயங்களை சாதிக்க முடியும்" என்று கூறினார்.

பேச்சுவார்த்தையின் முடிவில் இரு நாடுகளும் ஒருமித்த கருத்தை எட்டியதாக டிரம்ப் கூறியுள்ளார்.

மேலும் சீன அதிபருடனான சந்திப்பு மிகச் சிறப்பாக இருந்ததாகவும் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சீன ரசாயனப் பொருள்களுக்கான வரியை 20%லிருந்து 10% ஆக குறைத்து அறிவித்துள்ளார்.

Summary

China President Xi Jinping says US China must be partners and friends

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com