பசும்பொன் தேவருக்கு ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன் அஞ்சலி! சசிகலாவும் வருகை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன் இணைந்து அஞ்சலி...
OPS, Sengottaiyan, TTV Dinakaran joins to pay tribute to Pasumpon Thevar
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன் இணைந்து அஞ்சலிDIN
Published on
Updated on
1 min read

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகிய மூவரும் இணைந்து பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவருக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவையொட்டி அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆகிய இருவரும் மதுரையில் இருந்து பசும்பொன்னுக்கு ஒரே காரில் பயணித்தனர். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் இவர்களுடன் இணைய உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில் பசும்பொன் செல்லும் வழியில் அபிராமம் பகுதியில் உள்ள சாலையில் மூவரும் சந்தித்துப் பேசியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன் மூவரும் பசும்பொன் வந்தனர்.

பின்னர் மூவரும் ஒன்றாக இணைந்து முத்துராமலிங்கத் தேவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதன்பின்னர் வந்த சசிகலாவும் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய நிலையில், சசிகலாவுடன் ஓபிஎஸ், செங்கோட்டையன் ஆகியோர் பேசியுள்ளனர்.

Summary

OPS, Sengottaiyan, TTV Dinakaran joins to pay tribute to Pasumpon Thevar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com