சென்னை: தமிழகத்தில் ஓஆர்எஸ் கரைசல் என்ற பெயரில் போலியான பானங்களை விற்பனை செய்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியிருக்கிறது.
நாடு முழுவதும் ஓஆர்எஸ் என்ற பெயரில் பானங்களை அனுமதியின்றி விற்பனை செய்ய மத்திய அரசு கடந்த வாரம் தடை விதித்திருந்தது.
இந்த நிலையில், ஓஆர்எஸ் என்ற பெயரில் போலி பானங்களை விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாவட்டங்களில் உள்ள மருந்தகம் உள்ளிட்டவற்றில் நேரடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கும் சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஓஆர்எஸ்எல், ஓஆர்எஸ்எல் பிளஸ், ஓஆர்எஸ் ஃபிட் என்ற பெயர்களில் பானங்களை மருந்தகங்களில் விற்பனை செய்யக் கூடாது என்று சுகாதாரத் துறை தடை விதித்துள்ளது.
மேலும், உலக பொது சுகாதார நிறுவனத்தால் வழங்கப்படும் அங்கீகாரம் அச்சிடப்பட்ட ஓஆர்எஸ் மட்டுமே விற்பனை செய்யப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதும் ஓஆர்எஸ்எல் என்று பெரிய கொட்டை எழுத்துகளில் அச்சிடப்பட்ட போலியான பானங்கள் பல்வேறு வண்ண நிற பெட்டிகளில் விற்பனையாகி வந்தது. அதில், கடைசியாகக் கீழே, இவை ஓஆர்எஸ் இல்லை என்று அச்சிடப்பட்டிருப்பதையும் காண முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஹீட் ஸ்ட்ரோக் - உயிருக்கு ஆபத்து! அறிகுறிகள் என்ன?

காலாவதியான, போலி குளிா்பானங்களை விற்றால் கடும் நடவடிக்கை: உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை

வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல்

கோடை நோய்களுக்கு பாராசிட்டமால் கூடாது: பொது சுகாதாரத் துறை
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


