

கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் தொடர்ந்து 5 மணி நேரமாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் வேலுச்சாமி புரத்தில் கடந்த மாதம். அக். 27 ஆம் தேதி த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். 110 பேர் படுகாயம் அடைந்தனர்.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஒரு நபர் ஆணையம் மற்றும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை ரத்து செய்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் குமார் தலைமையில் சிபிஐ குழுவினர் அண்மையில் விசாரணையைத் தொடங்கினர்.
கடந்த 2 வாரங்களாக இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே 2ஆம் கட்ட விசாரணை நேற்று தொடங்கியுள்ளது.
தொடர்ந்து இன்று காலை சாட்சியங்களை அலுவலகத்திற்கு வரவழைத்து அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சாட்சியங்களில் 3 பேரை சம்பவ நடந்த இடத்திற்கு நேரடியாக அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
மேலும் அப்பகுதியைச் சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
வேலுச்சாமிபுரம் பகுதியில் 500மீட்டர் தொலைவிற்கு சாலையின் இருபுறமும் கயிறுகள் மூலம் தடுப்புகள் ஏற்படுத்தி விசாணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் வெறிச்சோடி காணப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.