மாணவர்களுக்கு மடிக்கணினி: 3 நிறுவனங்களுக்கு ஒப்பந்த ஆணை!

கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி கொள்முதல் பற்றி...
college students soon to get govt laptops; order issued to 3 companies
தமிழக அரசு(கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்காக 3 நிறுவனங்களுக்கு தமிழக அரசு ஒப்பந்த ஆணை வழங்கியுள்ளது.

தமிழகத்தில் 2 ஆண்டுகளில் கல்லூரி மாணவர்களுக்கு 20 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான பணிகள் நடந்துவரும் நிலையில், முதற்கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய 3 நிறுவனங்களுக்கு தமிழகத்தின் எல்காட் நிறுவனம் ஒப்பந்த பணி ஆணை வழங்கியுள்ளது.

இதற்காக எச்பி, டெல், ஏசர் ஆகிய மூன்று நிறுவனங்கள் தயார் செய்யும் மடிக்கணினி மாதிரிகள் மற்றும் அதில் உள்ள தொழில்நுட்ப அம்சங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதி செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வருகிற மார்ச் மாதத்துக்குள் 10 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்து மாணவர்களுக்கு விநியோகம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Summary

College students soon to get govt laptops; order issued to 3 companies

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com