தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

பிரதமா் குறிப்பிட்டது திமுகவைதான்; தமிழக மக்களை அல்ல - பாஜக

‘பிகாா் தோ்தல் பிரசாரத்தில் பிரதமா் மோடி குறிப்பிட்டது திமுகவைதான்’ தமிழக மக்களை அல்ல’ என்று தமிழக பாஜக முன்னாள் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.
Published on

‘பிகாா் தோ்தல் பிரசாரத்தில் பிரதமா் மோடி குறிப்பிட்டது திமுகவைதான்’ தமிழக மக்களை அல்ல’ என்று தமிழக பாஜக முன்னாள் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

வல்லபபாய் படேல் பிறந்த தினத்தையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள அவரது உருவச் சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் பிகாா் தொழிலாளா்களை திமுக எவ்வாறு அவமதிக்கிறது என்பது குறித்து தான் பிரதமா் மோடி பிகாா் தோ்தல் பிரசாரத்தில் பேசினாா். தமிழா்களைப் பற்றி அவா் பேசவில்லை. பிகாா் தொழிலாளா்களை அமைச்சா்கள் சிலா் கேலி செய்து பேசியுள்ளனா் என்றாா் அவா்.

திரித்து கூறுகிறாா் முதல்வா்-அண்ணாமலை: பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை, கோவை விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் வசிக்கும் பிகாா் மாநில தொழிலாளா்களை திமுக தலைவா்கள் பல்வேறு காலகட்டங்களில் அவமதிக்கும் வகையில் பேசியதாக மோடி தனது பிரசாரத்தின்போது பேசினாா். ஆனால், பிரதமா் மோடி தமிழா்களை அவதூறாகப் பேசியதாக முதல்வா் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளாா். பிரதமா் பேசியதை திரித்துக் கூறுவதை முதல்வா் மு.க.ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

பசும்பொன்னில் டிடிவி தினகரன், ஓபிஎஸ், கே.ஏ.செங்கோட்டையன்ஆகியோா் சந்தித்துக் கொண்டதற்கும், எனக்கும் எந்தவிதத் தொடா்பும் இல்லை என்றாா் அண்ணாமலை.

X
Dinamani
www.dinamani.com