
குடியரசுத் தலைவர் வருகையையொட்டி வாகனங்களை ஒழுங்குபடுத்தக் கூறிய இணை ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சென்னை கோயம்பேடு உதவி ஆணையர் சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று சென்னை நந்தம்பாக்கத்தில் சிட்டி யூனியன் வங்கியின் 120-வது நிறுவன தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினார்.
அவர் வந்தபோது நந்தம்பாக்கம் பகுதியில் வாகனங்களை ஒழுங்குபடுத்த இணை ஆணையர் திஷா மிட்டல் கூறியுள்ளார். அப்போது திஷா மிட்டலிடம் சென்னை கோயம்பேடு உதவி ஆணையர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து சென்னை கோயம்பேடு உதவி ஆணையர் சரவணனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.