
சாத்தூர் அருகே கீழத்தாயில்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கீழத்தாயில்பட்டி பகுதியில் சிவகாசியைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான நாக்பூர் உரிமம் பெற்ற பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
40-க்கும் மேற்பட்ட அறைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று(புதன்கிழமை) பட்டாசு தயாரிப்பின்போது உராய்வின் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்த வெம்பக்கோட்டை, ஏழாயிரம்பண்ணை, சிவகாசி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வெம்பக்கோட்டை போலீசார் மற்றும் வருவாய் துறையினர் விரைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.