திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு புதன்கிழமை பிற்பகல் தரிசனம் செய்தார்.
இரண்டு நாள் பயணமாக தமிழகத்துக்கு வருகை தந்த குடியரசுத் தலைவர் முர்மு, சென்னையில் இருந்து இன்று நண்பகல் திருச்சி வந்தடைந்தார்.
அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் சென்ற குடியரசுத் தலைவர், மத்திய பல்கலைக்கழகத்தின் 10 வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு திருச்சி திரும்பிய முர்மு, ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் தரிசனம் செய்தார். அவருடன் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியும் வருகை தந்தார்.
குடியரசுத் தலைவரின் வருகையையொட்டி, அரங்கநாத சுவாமி கோயிலில் பக்தர்களுக்கு பிற்பகல் 1 மணிக்கு பிறகு அனுமதி வழங்கப்படவில்லை. மாலை 6 மணிக்கு மேல் பக்தர்களுக்கு வழக்கம்போல் அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரிசனத்துக்கு பிறகு திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் தில்லி திரும்புகிறார் குடியரசுத் தலைவர் முர்மு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.