
பாஜக கூட்டணியில் இருந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விலகியுள்ளார்.
காட்டுமன்னார்கோயிலில், செய்தியாளர்களுடன் பேசிய அவர், ”2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக எந்தக் கூட்டணியில் இடம்பெறும் என வரும் டிசம்பர் மாதம் அறிவிப்பேன்” எனக், கூறியுள்ளார்.
மேலும், துரோகம் தலைவிரித்து ஆடுகின்றது எனவும் அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் திரள வேண்டுமெனவும் அவர் பேசியுள்ளார்.
தில்லியில், தமிழக பாஜகவின் முக்கிய தலைவர்கள் கூடியுள்ள நிலையில், டிடிவி தினகரன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே, பாஜகவின் தே.ஜ.கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் விலகினார்.
இதனைத் தொடர்ந்து, அமமுக நடிகர் விஜய்யின் தவெகவுடன் கூட்டணியில் இணையக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அவ்வாறு, நடைபெற்றால் தமிழக அரசியல் களத்தில் புதிய மாற்றத்தை அது உருவாக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: ராமதாஸ் கெடுவுக்கு நாளை பதில் அளிக்கிறேன்: அன்புமணி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.