
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு எதிரொலியால் உபரி நீர் போக்கி மதகுகள் மூடப்பட்டன.
கர்நாடக மாநில அணைகளின் உபரி நீர்வரத்து காரணமாக நேற்று முன்தினம் நடப்பு ஆண்டில் 6-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது. இதனையடுத்து மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கி வழியாக உபரிநீர் திறந்துவிடப்பட்டது.
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது மழைப் பொழிவு குறைந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் குறைக்கப்பட்டது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து படிப்படியாக சரிந்தது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 23,300 கன அடியாக குறைந்தது.
நீர்வரத்து சரிந்த காரணத்தால் காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 22,500 கன அடி வீதம் நீர் மின் நிலையங்கள் வழியாக தண்ணீர் திறக்கப்படுகிறது.
கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்திற்காக அணையின் மேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 800 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால், மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள உபரி நீர் போக்கி வழியாக தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு மதகுகள் 2 நாள்களுக்கு பிறகு மூடப்பட்டன.
மேட்டூர் அணையின் தற்போதைய நீர்மட்டம் இன்று 3-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது. நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.