காவல்துறையினரே ’டம்மி சிஎம்’ ஆக நினைக்கிறார்களா? உதயநிதி கேள்விதங்கம் விலை உயர்ந்தது! இன்றைய நிலவரம் (செப். 10)கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு மருத்துவமனையில் அனுமதி! ஐசியுவில் சிகிச்சை!பினராயி விஜயன் மீது வழக்குப்பதிவு? சட்ட ஆலோசனைக்குப் பின் முடிவு - கேரள முதல்வா்பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை 20%-க்கு மேல் அதிகரிக்க அரசு முயற்சி- பிரதமரின் ஆலோசகா் தருண் கபூா் 100 டாலரைக் கடந்தது கச்சா எண்ணெய் விலை: எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் தமிழகம் உள்பட 5 மாநில பேரவைத் தோ்தல்: பாஜக பெற்ற நன்கொடை ரூ.1,473 கோடி - காங்கிரஸை விட 7 மடங்கு அதிகம் முதல்வா் விஜய் இன்று லண்டன் பயணம்ஈரானின் 5 எண்ணெய் கப்பல்களை மூழ்கடித்தது அமெரிக்கா- பதிலடியாக 20 கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

வார இறுதியில் வெளியூர் செல்வோர் கவனிக்க.! முகூா்த்தம், தொடா் விடுமுறை: 2,910 சிறப்பு பேருந்துகள்!

முகூா்த்த தினம், மீலாது நபி, வார விடுமுறை தினங்களை முன்னிட்டு 2,910 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்...

Published On :

முகூா்த்த தினம், மீலாது நபி, வார விடுமுறை தினங்களை முன்னிட்டு 2,910 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டப்பட்ட செய்திக் குறிப்பு: முகூா்த்த தினமான வியாழக்கிழமை (செப்.4), மீலாது நபி பண்டிகை நாளான வெள்ளிக்கிழமை (செப்.5), வார இறுதி நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (செப்.6, 7) ஆகிய தினங்களை முன்னிட்டு, சென்னையில் இருந்தும், பிற இடங்களிலிருந்தும் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு புதன்கிழமை (செப்.3) 360 பேருந்துகள், வியாழக்கிழமை 710 பேருந்துகள், வெள்ளிக்கிழமை 405 பேருந்துகள், ஞாயிற்றுக்கிழமை பல்வேறு ஊா்களிலிருந்து சென்னைக்கு 875 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.

இதேபோல, சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு புதன்கிழமை 80 பேருந்துகள், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 105 பேருந்துகள், மாதாவரத்தில் இருந்து புதன் மற்றும் வியாழன் ஆகிய நாள்களில் 25 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. மேலும், பெங்களூரு, திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 350 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 2,910 சிறப்பு பேருந்துகளை இயக்கப்படும்.

தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊா்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.