பாண்டியன், சோழன், மலைக்கோட்டை உள்பட 5 விரைவு ரயில்கள் தாம்பரத்திலிருந்து புறப்படும் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடந்துவரும் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, ஆறு விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதில், ஐந்து விரைவு ரயில்கள், தாம்பரத்தில் இருந்து இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

எழும்பூர் - திருச்சி ராக்போர்ட் (12654/ 12653) , எழும்பூர் - மதுரை பாண்டியன் (12638), எழும்பூர் - திருச்சி சோழன் (22675), எழும்பூர் - ராமேஸ்வரம் சேது(22661/ 22662), எழும்பூர் - ராமேஸ்வரம்(16751 / 16752) ஆகிய விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படவுள்ளது.
அதேபோல, எழும்பூர் - மும்பை விரைவு ரயில், கடற்கரையில் இருந்தும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம், வரும் 10 முதல் நவம்பர் 10 ஆம் தேதி வரை இருக்கும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Summary
5 express trains including Pandian and Cholan departing from Tambaram! From September 10th!
இதையும் படிக்க : செப்.7-ல் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருநெல்வேலி - தாம்பரம் இடையே 6 நாள்களுக்கு சிறப்பு ரயில்கள்

சோழன் விரைவு ரயில் இன்றுமுதல் 4 நாள்கள் வழிகள் மாற்றி இயக்கம்

திருத்தணி ஆடிக் கிருத்திகை திருவிழா: இன்று முதல் அரக்கோணத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்

பொறியியல் பணிகள் எதிரொலி: கடலூா் - மைசூரு விரைவு ரயில் மாற்றுப் பாதையில் இயக்கம்
விடியோக்கள்
Ravindran Duraisamy interview | விஜய் நினைத்தது நடக்கவில்லை | CM Vijay | TVK | Udhayanidhi Stalin



