
கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் ஏற்பட்ட ரசாயன கசிவால் பாதிக்கப்பட்ட 40-க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ரசாயன உற்பத்தி ஆலையில், இன்று (செப்.5) ரசாயன கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால், உண்டான நச்சுப்புகையை சுவாசித்த 40-க்கும் அதிகமானோருக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட 43 பேரும் உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மாவட்ட வருவாய்த் துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் காவல் துறை அதிகாரிகள் சம்பவம் நடைபெற்ற ஆலையில் சோதனை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில், இந்தக் கசிவானது ஆலைக்குள் இருந்த நீராவி வால்வில் இருந்து வெளியாகியிருக்கக் கூடும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து, முழுமையான விசாரணை மேற்கொள்ள கடலூர் ஆட்சியர் தலைமையில், வருவாய் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய துறைகளின் அதிகாரிகள் இடம்பெற்ற குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ம.க.ஸ்டாலின் மீது கொலை முயற்சி- நயினார் நாகேந்திரன் கண்டனம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.