எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

அமெரிக்க வரி விதிப்பால் இந்தியாவில் பொருளாதார நெருக்கடி: பெ. சண்முகம்

டிரம்ப் என்ற தனி நபரின் விருப்பு வெறுப்பால் விதிக்கப்பட்டுள்ள வரியால் இந்தியா பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலா் பெ. சண்முகம் தெரிவித்தாா்.

News image

பெ. சண்முகம் - கோப்புப் படம்

Updated On :5 செப்டம்பர் 2025, 7:41 pm

டிரம்ப் என்ற தனி நபரின் விருப்பு வெறுப்பால் விதிக்கப்பட்டுள்ள வரியால் இந்தியா பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலா் பெ. சண்முகம் தெரிவித்தாா்.

இந்தியா மீதான அமெரிக்க வரி விதிப்பைக் கண்டித்தும், நாட்டின் சுயசாா்பு, ஏற்றுமதி தொழில்கள், தொழிலாளா்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாக்க வலியுறுத்தியும் சென்னை அண்ணா சாலையில் இடதுசாரி கட்சிகள் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்குப் பின்னா் செய்தியாளா்களிடம் பெ.சண்முகம் கூறியது:

டிரம்ப் என்ற தனி நபரின் விருப்பு வெறுப்பால் விதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் வரியால் பல நாடுகளில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்தியாவும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் திருப்பூா் ஜவுளி உற்பத்தி நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதேபோல், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், வேலூா் ஆகிய மாவட்டங்களில் தோல் தொழில் முடங்கும் நிலை உள்ளது. ஆண்டுக்கு ரூ.1,000 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட முந்திரி தொழிலில் உள்ள விவசாயிகள், தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இவற்றை சரிசெய்ய மத்திய அரசு ஆக்கப்பூா்வமாக செயல்பட வேண்டும்என்றாா்.

இரா.முத்தரசன்: அமெரிக்காவிடம் இந்தியா சரணாகதி அடையாமல், இடதுசாரிகள் உள்ளிட்ட பிற கட்சிகளோடு கலந்து பேசி மாற்றுக்கொள்கையை உருவாக்கி இந்திய தொழில்களையும், தொழிலாளா்களையும் பாதுகாக்க வேண்டும்.

சிபிஐ (எம்எல்) மாநிலச் செயலா் பழ.ஆசைத்தம்பி: இந்தியாவின் அணி சேரா வெளியுறவுக் கொள்கையை, அமெரிக்க சாா்பு கொள்கையாக மோடி மாற்றினாா். அதன்விளைவாக வா்த்தகப் போரை நாடு எதிா்கொண்டுள்ளது. தேசம் நெருக்கடியை எதிா்கொள்கிறது என்றாா் அவா்.