பொன்னேரி பணிமனையில் பராமரிப்புப் பணி காரணமாக நாளை(செப். 7) இரவு சென்னை - கும்மிடிப்பூண்டி இடையே 11 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை சென்ட்ரல் - கூடூர் இடையே பொன்னேரி பணிமனையில் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் சென்னை கடற்கரை/மூர் மார்க்கெட் - கும்மிடிப்பூண்டி/சூலூர்பேட்டை இடையேயான ரயில்கள் செப். 7 ஆம் தேதி இரவு 8 மணி முதல் செப். 8 ஆம் தேதி அதிகாலை 4 மணி வரை புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
அதேபோல கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னைக்குச் செல்லும் ரயில்களும் மேற்குறிப்பிட்ட நேரத்தில் ரத்து செய்யப்படுகிறது.
அதற்குப் பதிலாக சென்னை கடற்கரை/மூர் மார்க்கெட் முதல் மீஞ்சூர் வரையிலும், மீஞ்சூரில் இருந்து சென்னை கடற்கரைக்கும் 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
செப். 8 அதிகாலை 4 மணிக்குப் பிறகு வழக்கம்போல ரயில்கள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
11 suburban trains between Chennai and Gummidipoondi will be cancelled tomorrow (Sept. 7) night due to maintenance work at the Ponneri yard.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










