எதிர்பாராதது, ஆனாலும் மகிழ்ச்சியே! பொறுப்பு பறிப்பு பற்றி செங்கோட்டையன்!

அதிமுக பொறுப்பு பறிக்கப்படும் என எதிர்பார்க்கவில்லை ஆனால் பொறுப்புப் பறிக்கப்பட்டது மகிழ்ச்சியே வேதனையில்லை. என செங்கோட்டையன் பதில்.
செங்கோட்டையன் பேட்டி
செங்கோட்டையன் பேட்டி
Published on
Updated on
1 min read

அதிமுகவின் பொறுப்புகளிலிருந்து நீக்கப்படுவோம் என எதிர்பார்க்கவில்லை. ஆனால் வேதனையில்லை, மகிழ்ச்சியே என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற எண்ணத்திலேயே கருத்து கூறினேன். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சியே. வேதனையில்லை என்று கூறிய செங்கோட்டையனிடம், கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தீர்கள். இப்போது கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளீர்கள். இதனை நீங்கள் எதிர்பார்த்தீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, நான் எதிர்பார்க்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் இணைக்க கட்சித் தலைமைக்கு செங்கோட்டையன் கெடு விதித்திருந்த நிலையில், கட்சிப் பொறுப்புகளில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, ஈரோடு மாவட்டம் கோபியில் தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார் செங்கோட்டையன்.

அப்போது, ஜனநாயக அடிப்படையில், என்னிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். என்னிடம் விளக்கம் கேட்காமலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிமுக மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று சொன்னேன். கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்படும் என நான் எதிர்பார்க்கவில்லை. என் மீதான நடவடிக்கைக்கு காலம் பதில் சொல்லும், எனது ஒருங்கிணைப்புப் பணி தொடரும். அதிமுகவில்தான் ஜனநாயகம் இருப்பதாகவும், யார் வேண்டுமானாலும் கருத்துகளைக் கூறலாம் என மேடைதோறும் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார் என்றும் செங்கோட்டையின் கூறினார்.

மேலும், இது என்னுடைய கருத்து மட்டுமல்ல, ஒட்டுமொத்த தொண்டர்களின் கருத்தும். என் நலன் கருதி அல்ல, கட்சியின் நலன் கருதியே கருத்துக் கூறினேன் என்றும் தெரிவித்துள்ளார்.

அதிமுக தலைமைக்கு கெடு விதித்திருந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை, அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக அறிவித்த அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி, அவரது தம்பி கே.ஏ. சுப்ரமணியன் உள்பட ஆதரவாளர்கள் ஏழு பேரின் பொறுப்புகளையும் பறித்து உத்தரவிட்டுள்ளார்.

கட்சிப் பொறுப்பிலிருந்து செங்கோட்டையனை நீக்கி அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை அவசர ஆலோசனை நடத்தியிருந்தார்.

அதன்பிறகு வெளியான அதிமுக அறிக்கையில், செங்கோட்டையனை கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

Summary

We do not expect to be removed from the responsibilities of the AIADMK. However, there is no pain, only happiness, said former minister Sengottaiyan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com