
பிரிந்தவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கெடு விதித்துள்ள நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த கட்சியின் மூத்த நிர்வாகி செங்கோட்டையன், நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, பிரிந்து சென்றவர்களை 10 நாள்களுக்குள் மீண்டும் இணைப்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர்களை இணைத்தால் மட்டுமே மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர முடியும் என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.
மேலும், பிரிந்தவர்களை இணைக்காவிட்டால் இபிஎஸ்ஸின் பிரசாரத்தில் பங்கேற்கப் போவதில்லை என்றும் ஒரே மனப்பான்மையில் இருப்பவர்கள் ஒன்றிணைவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
செங்கோட்டையனின் கருத்துக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், தமிழகத்தை மீட்போம் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் திண்டுக்கல்லில் இன்று காலை முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த ஆலோசனையில், அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.