
சென்னை: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெற வேண்டிய வர்கள் ஆசிரியா்கள் தொடர்பான விவரங்களைக் கணக்கெடுக்கும் பணிகளில் பள்ளிக் கல்வித் துறை ஈடுபட்டு வருகிறது.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தமிழகத்தில் 2011 முதல் தமிழகத்தில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு தோ்ச்சி அடிப்படையிலேயே நிரப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவால் தமிழகத்தில் சுமாா் 1.76 லட்சம் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழக அரசு இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, இரண்டு நாள்களுக்கு முன்பு ஆசிரியா்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் உறுதியளித்தார்.
இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தோ்ச்சி பெற்ற மற்றும் தோ்ச்சி பெற வேண்டியவா்கள் ஆசிரியா்கள் தொடர்பான விவரங்களைக் கணக்கெடுக்கும் பணிகளை பள்ளிக் கல்வித் துறை தொடங்கியுள்ளது.
இதுதொடர்பான தகவல்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் தொகுத்து அனுப்ப வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநரகம் சுற்றறிக்கை மூலமாக அறிவுறுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.