
தமிழகத்தில் சந்திரகிரகணம் போல் ஆட்சி மாற்றம் விரைவில் நிகழும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நெல்லையில் இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், தமிழகத்தில் நிறைய கிரகணங்கள் நடைபெற்று வருகின்றன. ஆட்சி மாற்றம் வேண்டும், கிரகணம் விரைவில் நடைபெறும். அகில இந்தியத் தலைமை என்ன கூறுகிறதோ, அதைத்தான் நான் கேட்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. அதிமுக கட்சியில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதைத் தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இது தொடர்பாகப் பல தலைவர்களிடம் நான் பேசியுள்ளேன். தமிழகத்தில் திமுக ஆட்சி மீண்டும் வந்துவிடக்கூடாது.
திமுகவுக்கு மாற்றான அரசு அமைய வேண்டும். இதற்காக அதிமுக கட்சி அனைவரும் ஒன்றிணைய வேண்டும். பலமுறை டிடிவி தினகரனோடு தொலைபேசியில் பேசியிருக்கிறேன். அப்பொழுது எல்லாம் கூட்டணி தொடர்பாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால் திடீரென்று நயினார்தான் காரணம் என்று கூறுகிறார். நயினார் நாகேந்திரன் செயல்பாடுகளால்தான் நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி உள்ளோம், நயினார் நாகேந்திரன் அகங்காரத்தில் செயல்படுகிறார் என்று எதன் அடிப்படையில் கூறுகிறார் என்பது எனக்குத் தெரியவில்லை, எனக்கு விளங்கவில்லை.
இந்திய நாட்டிற்கும் லண்டனுக்கும் நமது முதல்வர் நேரடியாகச் சென்று நட்புருவை ஏற்படுத்தினாரா? முதல்வர் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக, முதலீடு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இதுவரை அதற்கான பதில் இல்லை. கொளத்தூர் தொகுதியில் 9000 ஓட்டுகள் திருட்டு நடைபெற்றுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அது தொடர்பாகத் தாங்கள் ஆய்வு செய்ய உள்ளோம். எம்ஜிஆர் கூறியது போல் மற்றவர்களுக்குத் தோல்வியைப் பரிசளித்தே பழகியவர்கள் பாஜகவினர்.
ஒரு கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் போது செங்கோட்டையனை அழைப்பது நாகரீகமாக இருக்காது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.