/

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து விற்பனையாகி வருகிறது.

News image
தங்கம் விலை.
Updated On :8 செப்டம்பர் 2025, 5:51 am

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து விற்பனையாகி வருகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நில நாள்களாகவே ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 80 ஆயிரத்தைக் கடந்து ரூ.80,040-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) சென்னையில் 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,970-க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.79,760-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே போல, 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ஒரு கிராம் ரூ. 8,255-க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.66,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் 137 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,37,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

summary

In Chennai, the price of gold jewelry has decreased by ₹280 per gram and is being sold at a lower price.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.