அதிமுக கோமா நிலையில் உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
சென்னை மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில் புனரமைப்பு பணியை பார்வையிட்டபின் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு,
"எந்த கட்சியாவது நாங்கள் தேர்தலில் தோல்வி அடைவோம் என்று சொல்வார்களா? எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வரும் தேர்தலில் 210 தொகுதிகளில் வெல்வதாக குறைவாகச் கூறியிருக்கிறார். 234 தொகுதிகளிலும் வெல்வதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருக்க வேண்டும். 210 தொகுதிகளோடு நிறுத்திவிட்டார். அதிமுக கோமா நிலையில் உள்ளது.
திமுக மக்கள் விரும்பும் காட்சி. திமுகவை வசைபாடிய அண்ணாமலையே திமுக வலுவாக இருக்கிறது, திமுக கூட்டணி வலுவான கட்டமைப்பு கொண்டிருக்கிறது எனப் பேசியிருக்கிறார். அதிலிருந்தே திமுக பற்றி தெரியும்.
அதிமுக கோமா நிலையில் இருக்கிறது. தை மாதத்திற்குள் 4,000 கோயில்களில் குடமுழுக்கு நடத்தவிருக்கிறோம்" என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.