
ஒசூர் : தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்காக ஒவ்வொரு நாளும் உழைத்துக் கொண்டிருக்கிறார் நமது முதல்வர் என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.
ஒசூரில் இன்று நடைபெற்ற தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, முதல்வர் அவருடைய வீட்டில் துக்க நிகழச்சி, இருந்தாலும் இந்த தொழில் முதலீட்டு மாநாட்டிற்கு வந்தார். அவருடைய சம்பந்தி இன்று இயற்கை எய்து விட்டார். அந்த துயர நிகழ்ச்சி இருந்தாலும் ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்று இங்கு வந்துள்ளார் முதல்வர்.
திராவிட மாடல் ஆட்சி எல்லோரையும் உள்ளடக்கி பரவலாக்கிய வளர்ச்சி. அந்த முயற்சியில் தமிழ்நாடு வரலாறு காணாத அனைத்து பகுதிகளையும் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதுவரை சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகள், கோவை, கோவை சுற்றுப்புற பகுதிகள், மதுரை மற்றும் தென் மாவட்டங்கள் வளர்ச்சி இல்லாத நிலை மாறி வருகிறது.
முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி முயற்சியினால் டிவிஎஸ் போன்ற நிறுவனங்கள் ஒசூரில் தொழிலை தொடங்கின. தொழில் புரட்சி தொடங்கியது. அதன் பிறகு தமிழ்நாடு முழுவதும் தொழில் வளர்ச்சி நடந்தது என்றால் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆட்சியில்தான் நடைபெற்றுள்ளது என்பது அனைவரும் தெரியும்.
ரூ.15000 கோடி முதலீட்டை ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று 17,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி உள்ளார். கடந்த முறை தூத்துக்குடியில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் 32 ஆயிரம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டது. ஒசூரில் 24 ஆயிரம் கோடியில் முதலீடு பெறும் வகையில், தொழில் வளர்ச்சிக்கு முதலீடுகளை பெற்று வருகிறார்.
பெரிய தொழிற்சாலைகள் இங்கு வரும் பொழுது சிறு குறு தொழிற்சாலைகள் வளரும். பல்வேறு தொழில்கள், கார் உற்பத்தி, எலக்ட்ரானிக்ஸ் கார், கெமிக்கல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இன்று முதலீடு செய்யப்படுகிறது என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.