

சென்னையில் சங்கிலித் தொடர் ஜவுளிக்கடையின் உரிமையாளருக்கு சொந்தமான 20 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட பல்வேற்று நகரங்களில் இயங்கி வரும் சங்கிலித் தொடர் ஜவுளிக்கடையின் உரிமையாளர் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுகிறது.
சென்னையில் உள்ள ஜவுளிக்கடை உரிமையாளரின் வீடுகள், அலுவலகங்கள், கடைகள் என அவருக்கு தொடர்புடைய 20 -க்கும் மேற்பட்ட இடங்களில் 40 வாகனங்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
வழக்கமாக காவல்துறை அல்லது துணை ராணுவத்தின் பாதுகாப்புடன் சோதனை நடத்தப்படும் நிலையில், எவ்வித பாதுகாப்பும் இன்றி சோதனை நடத்தப்பட்டு வருகின்றது.
முன்னதாக, சென்னை வடபழனி, ராயப்பேட்டை, ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த வாரம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதேபோல், இரண்டு நாள்களுக்கு முன்பு சென்னையில் 5 -க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.