
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் சுற்றுப் பயணத்துக்கான இலச்சினையில் உங்க விஜய் நா வரேன் என்ற வாசகத்துடன் அக்கட்சி வெளியிட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் தேர்தல் சுற்றுப் பயணம், திருச்சியில் இருந்து தொடங்கும்நிலையில், சுற்றுப் பயணத்துக்கான இலச்சினையையும் அக்கட்சி வெளியிட்டுள்ளது.
வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு என்கிற தலைப்புடன், உங்க விஜய் நா வரேன் என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. மேலும், அதில் வாகை சூடும் வரலாறு திரும்புகிறது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, கட்சித் தலைவர்களும் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யும் நாளைமுதல் தனது முதல் சுற்றுப் பயணத்தை மேற்கொள்கிறார்.
இதையும் படிக்க: ராமரைப் பின்பற்றாத ஸ்டாலினுடன் காங்கிரஸ், ஆர்ஜேடி கூட்டணி ஏன்? அனுராக் தாக்குர்
TVK's Campaign Logo introduced
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.