இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது! மத்திய அரசுக்கு முதல்வா் ஸ்டாலின் வேண்டுகோள்!
இசைத் துறையில் பொன் விழா கண்டுள்ள இளையராஜாவுக்கு நாட்டின் உயரிய பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா்.

சென்னை நேரு உள்விளையட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜாவின் பொன் விழா ஆண்டு பாராட்டு விழாவில் அவருக்கு நினைவுப் பரிசு வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். அருகில், ரஜினிகாந்த், கமலஹாசன்.








