
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள மு. வீரபாண்டியனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துப் பதிவில்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள மு. வீரபாண்டியனுக்கு வாழ்த்துகள்.
இயக்கத்தை இதுநாள் வரையில் சிறப்பாக வழிநடத்தி, தோழமை பாராட்டிய தோழர் முத்தரசனுக்கு நன்றி. ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகப் பாடுபடும் இடதுசாரி அரசியலில் இணைந்து பயணித்து, வெற்றி காண்போம் என்று தெரிவித்துள்ளார்.
கட்சியின் செயலாளராக முத்தரசன், 2015 ஆம் ஆண்டுமுதல் 10 ஆண்டுகளாக பதவி வகித்து வந்தநிலையில், இன்று நடைபெற்ற கூட்டத்தில் செயலாளராக மு. வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டார்.
கட்சியின் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதையடுத்து, அவருக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: இந்திய கம்யூ. தமிழ் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.