இந்திய கம்யூ. தமிழ் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக மு. வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளது பற்றி...
M. Veerapandian
மு. வீரபாண்டியன்X
Published on
Updated on
1 min read

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக மு. வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக இரா. முத்தரசன் 3 முறை தேர்வு செய்யப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் புதிய செயலாளரைத் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்றன.

கடந்த மாதம் சேலத்தில் நடைபெற்ற மாநில மாநாட்டில் ஒருமித்த கருத்து இல்லாததால் புதிய செயலாளரைத் தேர்ந்தெடுக்க முடியாமல் போன நிலையில், இன்று(செப். 13) சென்னை சூளைமேட்டில் நடைபெற்ற மாநிலக் குழுக் கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளராக மு. வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இன்றைய கூட்டத்தில் அகில இந்தியப் பொதுச்செயலாளர் டி. ராஜா, இரா. முத்தரசன் உள்ளிட்ட 110 மாநிலக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாக கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த மு. வீரபாண்டியன், கட்சியின் இளைஞர் பிரிவான அகில இந்திய இளைஞர் கூட்டமைப்பில் பணியாற்றியுள்ளார்.

மு. வீரபாண்டியனுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்சியின் புதிய மாநிலச் செயலாளர் தேர்வு செய்யப்படுவார். ஒருவருக்கு அதிகபட்சமாக 3 முறை வாய்ப்பளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

M. Veerapandian is new Tamilnadu CPI secretary

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com