
அரியலூர்: திருச்சியில் மக்களைச் சந்தித்து பரப்புரையில் ஈடுபட்ட பின், தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் அரியலூர் வந்தடைந்தார்.
எனினும், தவெக பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு விஜய் செல்வதற்கு தாமதமாகி வருகிறது. அங்கு திரளான தொண்டர்கள் விஜய்யின் பேச்சைக் கேட்க நெடுநேரமாக காத்திருக்கின்றனர். விஜய் அரியலூருக்குச் செல்வதில் தாமதமானதால் அவர் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு எப்போதுதான் வரப் போகிறார் என்று முணுமுணுப்பதையும் கேட்க முடிகிறது. எனினும், காத்துக்கிடக்கும் தொண்டர்களிடம் உற்சாகம் குறைந்தபாடில்லை.
முன்னதாக, திருச்சியில் சனிக்கிழமை(செப். 13) பிற்பகல் பிரசாரத்தை தொடங்கிய விஜய், அங்கிருந்து திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை வழியாக அரியலூா் வந்தார். இதனைத்தொடா்ந்து அங்கிருந்து, கல்லங்குறிச்சி சாலை வழியாக புறவழிச்சாலை சென்று பெரம்பலூா் மாவட்டம் குன்னம் செல்ல உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.