விஜய் படித்து தெரிந்துகொள்ள வேண்டும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தவெக தலைவர் விஜய் குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் விமர்சனம்.
“உலக தற்கொலை தடுப்பு” வார விழிப்புணர்வு  நிகழ்வில்  அமைச்சர் மா. சுப்பிரமணியன்.
“உலக தற்கொலை தடுப்பு” வார விழிப்புணர்வு நிகழ்வில் அமைச்சர் மா. சுப்பிரமணியன்.
Published on
Updated on
1 min read

திமுக அரசை குற்றம் சுமத்துவதற்கு முன்பாக, தவெக தலைவர் விஜய் படித்துவிட்டு வந்து பேச வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

பெசன்ட் நகர் கடற்கரையில் “உலக தற்கொலை தடுப்பு” வார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பங்கேற்றார்.

இதனைத் தொடந்து, அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”உலக தற்கொலை தடுப்பு வாரத்தை ஒட்டி, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு என்பது அவசியமான ஒன்று. விழிப்புணர்வை ஏற்படுத்தி தற்கொலை எண்ணம் வராமல் தடுத்தல், தற்கொலை எந்த விஷயத்திற்கும் தீர்வல்ல என்பதை உணர்த்துதல் போன்ற விஷயங்களை விழிப்புணர்வு மூலம் எடுத்துச் செல்வதற்கு பல்வேறு வகைகளில் மனநல மருத்துவமனையும் நம்முடைய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் ஒருங்கிணைந்து இந்த நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

2021-ல் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக தற்கொலைகள் நிகழ்ந்திருக்கிற ஆண்டாக இருந்திருக்கிறது.

நேற்றைய நாள் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்திய பொருளாதார வளர்ச்சியைவிட தமிழகத்தின் வளர்ச்சி அதிகம். விஜய் போன்றவர்கள் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்து படித்து, கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும்.

தமிழகத்தில் பல திட்டங்கள் நிறைவேற்றப்படுவதை விஜய் மறந்துவிடக் கூடாது, அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படுகின்றன; நிறைவேற்றவில்லை என்று கூறும் விஜய்க்கு அந்த உண்மை தெரியும்” என்றார்.

Summary

Minister M. Subramanian criticizes Thaweka leader Vijay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com