
சென்னையில் இருந்து திருச்சி சென்ற தவெக தலைவர் விஜய்யின் விமானத்தை ஒரே நேரத்தில் அதிகளவில் ட்ராக் செய்யப்பட்டு சாதனை புரிந்துள்ளது.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கி விட்டன.
தவெக தலைவர் விஜய்யும், தனது முதல் தேர்தல் பரப்புரையை திருச்சியிலிருந்து சனிக்கிழமையில் தொடங்கினார். இந்த பயணத்தின்போது, சென்னையில் இருந்து திருச்சி செல்ல அவரின் தனி விமானத்தையே பயன்படுத்தினார்.
சென்னையில் சனிக்கிழமை காலை 8.55 மணிக்குப் புறப்பட்ட விஜய்யின் விமானம், திருச்சிக்கு 9.34 (39 நிமிடங்கள்) மணிக்கு சென்றடைந்தது.
இந்த நிலையில், உலகளவில் ஒரே நேரத்தில் அதிகளவில் ட்ராக் (Track) செய்யப்பட்ட விமானம் என்ற பெருமையை விஜய்யின் விமானம் பெற்றுள்ளது. திருச்சி சென்ற விஜய்யின் விமானத்தை, நேற்று ஒரே நேரத்தில் சுமார் 9,000 பேர் ட்ராக் செய்துள்ளனர்.
விஜய் பயன்படுத்திவரும் விடி டிஎஸ்ஜி ஹாக்கர் 800எக்ஸ்பி (VT TSG Hawker 800XP) என்ற தனி விமானம், சொகுசு போன்றல்லாமல் நடுத்தர விமானம்தான் என்று கூறப்படுகிறது.
இதன் விலை சுமார் ரூ. 100 கோடி என்று கூறப்படுவதுடன், இதில் 8 முதல் 13 பேர் பயணிக்கலாம் என்றும், 4,000 கி.மீ. தொலைவுக்குச் செல்லக் கூடியது என்பதால், ஓய்வறையும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: திருச்சிக்கு திட்டங்கள் இல்லை! விஜய்யின் குற்றச்சாட்டுக்கு அன்பில் மகேஸ் மறுப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.