ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர் சடலம்! கொலையா? தற்கொலையா?

ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலை உயர்நிலை மேம்பாலத்திற்கு கீழே இளைஞர் சடலம் மீட்கப்பட்டது பற்றி...
சரவணன்
சரவணன்
Published on
Updated on
1 min read

ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலை உயர்நிலை மேம்பாலத்திற்குக் கீழே செவ்வாய்க்கிழமை காலை இளைஞர் ஒருவர் உயிரிழந்து கிடந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் - வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் உயர்நிலை மேம்பாலத்திற்குக் கீழே வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடப்பதாக நகர காவல் நிலைய காவல் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல் துறையினர் இறந்தவரின் உடலை உடற்கூராய்வுக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் புது மண்டி பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரின் மகன் சரவணன் (38) என்றும், இவர் கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் சரவணனை யாரேனும் கொன்று பாலத்துக்கு கீழே போட்டுச் சென்றனாரா அல்லது அவர் தற்கொலை செய்துகொண்டாரா? என்பது குறித்து வழக்கு பதிந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Summary

Youth's body found in a blood on Ambur National Highway! Murder? Suicide?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com