
சென்னையில் அமமுக பொதுச் செயலாளர் தினகரனை, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று(செப். 22) சந்தித்துள்ளார்.
சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்தில், தினகரனுடன் அண்ணாமலை சுமார் 2 மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், அமமுக பொதுச் செயலர் டி.டி.வி.தினகரனும் அக்கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்து வந்தார்.
இந்த நிலையில், அமமுக பொதுச் செயலாளர் தினகரனை, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.
மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரும்படி, டிடிவி தினகரனுக்கு, அண்ணாமலை அழைப்பு விடுத்தாகக் கூறப்படுகிறது.
அண்ணாமலை - டிடிவி தினகரன் இடையேயான சந்திப்பு அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பாஜக மேலிட பார்வையாளர் அரவிந்த் மேனன் , மாநில துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம் ஆகியோர் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேற்று சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: 38,000 பாடல்கள்... பாடகரின் மறைவால் ஸ்தம்பித்த அசாம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.