
திருவாரூரில் விஜய்க்கு மாலை அணிவித்தது தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த சனிக்கிழமை திருவாரூர் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார். திருவாரூர் வந்த விஜய்க்கு அங்குகூடியிருந்த தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேலும் தவெக நிர்வாகிகளும் கிரேன் மூலம் பிரமாண்ட மாலை அணிவித்து அவரை வரவேற்றனர். விஜய் அந்த மாலையை தனது பிரசார வாகனத்தில் நின்றபடி ஏற்றுக்கொண்டார்.
இதுதொடர்பான புகைப்படங்களும் விடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்த நிலையில் விஜய்க்கு மாலை அணிவித்தது தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜே.சி.பி உரிமையாளர் மற்றும் தவெக நிர்வாகிகள் மீது பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.