சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதுமே அண்மையில் வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருகிறது. பெரும்பாலும் சோதனையில் அது புரளி எனத் தெரிய வருகிறது.
அந்த வகையில் சென்னையில் சமீபமாக வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வருகின்றன.
சென்னை உயர்நீதிமன்றம், ஜிஎஸ்டி அலுவலகம், சென்னை வானிலை ஆய்வு மையத்தைத் தொடர்ந்து நேற்று தேனாம்பேட்டையில் முதன்மை கணக்காளர் ஜெனரல் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து சோதனையில் அது புரளி எனத் தெரிய வந்தது.
இதன் தொடர்ச்சியாக நேற்று(செவ்வாய்க்கிழமை) இரவு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மோப்ப நாய் உதவியுடன் போலீஸார், வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டதில் அது புரளிதான் என தெரிய வந்தது. மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்து ராயப்பேட்டை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.