
தமிழக அரசு அறிவித்த தஞ்சை - புதுக்கோட்டை மாவட்டங்களில் பாக் வளைகுடாவில் உள்ள முதல் கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்க(ஐயுசிஎன்) மாநாட்டில் இதுதொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"தஞ்சை - புதுக்கோட்டை மாவட்டங்களில் அமைந்த பாக் வளைகுடாவில், நமது திமுக அரசு அறிவித்த இந்தியாவின் முதல் கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம்!
இந்த முன்னோடி முயற்சியைப் பாராட்டும் தீர்மானம், 2025 அபுதாபி ஐயுசிஎன் மாநாட்டுக்கு முன் ஆன்லைன் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டது. இந்த முயற்சியில் பங்கேற்ற தமிழக வனத்துறை, ஓம்கார் பவுண்டேஷன் உள்ளிட்ட அனைவர்க்கும் பாராட்டுகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | ரணகளம்... முதல்வரின் ஏஐ விடியோவை பகிர்ந்த உதயநிதி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.