
கரூர் விஜய் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 38 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 51 பேர் சிகிச்சைப் பெற்று வரும் சூழலில், பலர் கவலைக்கிடமாக சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தவெக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் மீது 4 பிரிவுகளின் கீழ் மாநகரக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் கட்சியின் தலைவா் விஜய் மற்றும் இதர நிா்வாகிகளை பின்னா் சோ்க்கவும் போலீஸாா் ஆலோசித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.