கரூர்: கரூரில் விஜய் பிரசாரத்தில் 39 பேர் மயக்கமடைந்து பலியானதாகக் களத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரசாரத்தில் கலந்துகொண்ட திரளான மக்கள் கூட்டத்தில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. அவர்களுள் குழந்தைகளும் அடங்குவர் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் கரூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அங்கு சென்றவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
கரூரில் தவெக பிரசாரம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள வேலுசாமிபுரத்துக்கு வழக்கம்போல இன்றும்(செப். 27) காலதாமதமாக, சரியாகச் சொல்ல வேண்டுமானால் மாலை 7 மணியளவில் வருகை தந்த விஜய் பிரசாரம் செய்தார்.
விஜய் மைக் பிடித்து பேசியதோ, பத்து நிமிடங்களை நெருங்கியதா என்றால் அது கேள்விக்குறியே? ஆனால், அந்தக் குறுகிய காலத்துக்குள், (அதாவது விஜய்யின் வாகனம் வந்து நின்றது முதல் அவர் வாகனத்தின் மேலே ஏறி, அதன்பின் பேசி முடித்துக் கொண்டு திரும்பியது வரை...) அதற்குள் அந்த இடமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் உருமாறிவிட்டது. அதற்கு முக்கிய காரணம், விஜய்யின் வாகனம் நிறுத்தப்பட்டிருந்த இடத்திலிருந்து சுமார் 20 அடி தூரத்தில் அவரை காண திரண்டிருந்த மக்கள் கூட்டத்தில் நின்றிருந்த சிலர் மயக்கமடைந்து விழுந்ததால் அந்த இடத்தில் பரபரப்பு உண்டானது. இதை மேலே நின்றபடி பேசிக் கொண்டிருந்த விஜய் கவனித்து விட்டார்.
உடனடியாக பேசுவதை நிறுத்திக்கொண்டு, அவர் தமது உதவியாளர்களிடமிருந்து தண்ணீர் பாட்டில்களை வாகனத்தினுள் இருந்து எடுத்துவர பணித்தார். அதன்பின், அந்த பாட்டில்களை கூட்டத்தை நோக்கி வீசி, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு முதலுதவி செய்ய உதவினார். மேலும், ஆம்புலன்ஸ் ஒன்றையும் உடனடியாக சம்பவ இடத்துக்கு வரவழைக்குமாறு உதவியாளர்களிடம் அறிவுறுத்தினார். இதனால் சில நிமிடங்கள் அங்கு அமைதி நிலவியது.
அதன்பின், அவர் இடைவெளிவிட்டு பேசிவிட்டு, பிரசாரத்தை முடித்துக்கொண்டு 7.30 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இந்த நிலையில், விஜய் பிரசாரத்தை முடித்துச் என்ற சில நிமிடங்களிலேயே, அங்கு திரண்டிருந்த மகக்ள் வெள்ளத்தில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் 39-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்து பலியானதாகக் களத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில், மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமான நிலையில் கரூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அங்கு சென்றவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. இதனால் கரூர் மருத்துவமனை அழுகுரல் நிரம்பி காட்சியளிக்கிறது.
இந்தத் தகவலைத் தொடர்ந்து, கரூர் மாவட்ட ஆட்சியர் அரசு மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். அங்கு மயக்கமடைந்த நபர்களுக்கு தேவையான சிகிச்சையளிக்க அவர்கள் அறிவுறுத்தினார். மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
இந்த நிலையில், இந்த துயர சம்பவத்துக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். தேவையான சிகிச்சையளிக்க அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பிரசார கூட்டத்துக்கு விஜய் தாமதமாக வருகை தந்தது, பல மணி நேரமாக விஜய்யைக் பார்க்க வெயிலிலும் காத்திருந்த மக்கள் தளர்ந்து போயிருந்தது, மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் காவல் துறை கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் என்பன போன்ற பல காரணங்கள் இந்த துயரத்துக்கு முக்கிய காரணமாக பொதுவெளியில் சொல்லப்படுகின்றன. தமிழக அரசு அமைத்துள்ள விசாரணை ஆணையம் விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
உயிரிழந்த உடல்களுக்கு சனிக்கிழமை(செப். 27) நள்ளிரவே பிரேதப் பரிசோதனை செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Vijay's unexpected Minutes in Karur - A disaster in the campaign
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கரூரில் இரு மதுக்கடைகள் மூடல்!

நாமக்கல் To கரூர்! விஜய் அளித்த விளக்கம்! | TVK | Karur

கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்
அரசியல் களத்தை மாற்றியிருக்கிறது தவெக! கே.ஜி.அருண்ராஜ் சிறப்பு நேர்காணல்!
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

