கரூர் நெரிசல் பலி பேரதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது -கமல் இரங்கல்!

விஜய்யின் பிரசாரத்தில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் 31 பேர் பலி...
கரூர் நெரிசல் பலி பேரதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது -கமல் இரங்கல்!
Published on
Updated on
1 min read

கரூரில் விஜய்யின் பிரசாரத்தில் ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் 31 பேர் பலியாகினர். இந்த துயர சம்பவத்துக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், கமல் ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘நெஞ்சு பதைக்கிறது. கரூரிலிருந்து வரும் செய்திகள் பேரதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கவும் வார்த்தைகளின்றித் திகைக்கிறேன்.

நெரிசலிலிருந்து மீட்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணமும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

Karur stampede death toll is shocking and painful - Kamal condoles!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com