மணல் கொள்ளைதான் கரூரின் தீராத தலைவலி: தவெக தலைவர் விஜய்

மணல் கொள்ளைதான் கரூரின் தீராத தலைவலி என்று தவெக தலைவர் விஜய் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தவெக தலைவர் விஜய்.
தவெக தலைவர் விஜய்.
Published on
Updated on
1 min read

மணல் கொள்ளைதான் கரூரின் தீராத தலைவலி என்று தவெக தலைவர் விஜய் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கரூரில் இன்று அவர் பேசுகையில், காவல் துறை இல்லையென்றால் நான் இங்கு வந்திருக்க முடியாது. எனவே, அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. கரூருக்கு ஏராளமான சிறப்புகள் உள்ளன. கரூர் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி 448-ல் சொல்லியிருந்தார்கள்.

அந்த வாக்குறுதியை நிறைவேற்றினார்களா. விமான நிலையம் அமைத்தால் ஜவுளித் தொழில் வளர்ச்சி அடையும். பரந்தூர் மாதிரி இல்லாமல் மக்கள் பாதிக்காத வண்ணம் விமான நிலையம் அமைக்க வேண்டும். மணல் கொள்ளைதான் கரூரின் தீராத தலைவலி. மணல் கொள்ளையர்களிடமிருந்து கரூருக்கு விடுதலை வேண்டும்.

மணல் கொள்ளை கரூரை வறண்ட மாவட்டமாக ஆக்கிவிட்டது. அத்தோடு சட்டவிரோத கல்குவாரிகள் கரூரின் கனிமவளத்தை அழித்துக்கொண்டு இருக்கிறது. இதற்கு காரணம் யார் சிஎம் சார்?. தமிழ்நாட்டின் 3ஆவது பெரிய ஏரி பஞ்சபட்டி ஏரி. ஆனால் பல ஆண்டுகளாக அந்த ஏரியை சீரமைக்கவில்லை.

செவ்வாய் கிரகத்தில் ஐடி கம்பெனி, அமெரிக்காவுக்கு ஒற்றையடிப் பாதை... விஜய் கலகலப்பு!

தவெக ஆட்சிக்கு வந்ததும் பஞ்சபட்டி ஏரிக்கு உயிர் வரும். 6 மாதத்தில் ஆட்சி மாறும். அதிகாரம் கை மாறும். மிக சீக்கிரம் எல்லோருக்கும் சுதந்திரம் கிடைக்கும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

2026 சட்டப்பேரவை தோ்தலையொட்டி, விஜய் கடந்த 13-ஆம் தேதி முதல் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மக்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகிறாா். அதன்படி செப்.13-இல் திருச்சி, அரியலூா், செப்.20-இல் நாகை, திருவாரூா் ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டாா். அதைத்தொடா்ந்து, நாமக்கல்லிலும் கரூரிலும் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.

Summary

Vijay has alleged that sand theft is Karur's un-ending headache.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com