பனையூரில் விஜய்
பனையூரில் விஜய்

விஜய் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

கரூா் சம்பவத்தின் எதிரொலியாக தவெக தலைவா் விஜய் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Published on

கரூா் சம்பவத்தின் எதிரொலியாக தவெக தலைவா் விஜய் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கரூரில் தவெக தலைவா் விஜய் சனிக்கிழமை மேற்கொண்ட பிரசாரத்தில் ஏற்பட்ட நெரிசலின் காரணமாக 38 போ் உயிரிழந்தனா். இதற்கிடையே கரூரில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு விஜய், திருச்சியில் இருந்து தனி விமானம் மூலம் இரவு 11 மணியளவில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தாா். அங்கிருந்து தனது காரில் நீலாங்கரையில் உள்ள வீட்டுக்குச் சென்றாா். ஏற்கெனவே தீவிர அரசியல் ஈடுபட்டு வரும் விஜய்க்கு மத்திய அரசு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பை வழங்கியுள்ளது.

தற்போது கரூா் சம்பவத்தைக் கருத்தில்கொண்டு, நடிகா் விஜய் வீட்டுக்கு சனிக்கிழமை இரவு முதல் காவல் துறை பாதுகாப்பை அதிகரித்துள்ளது. விஜய் வீடு இருக்கும் பகுதிக்கு சந்தேகத்துக்குரிய வகையில் செல்லும் அனைவரையும் விசாரிக்கும்படி போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், விஜய் வீட்டின் அருகே சாலைத் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. அதோடு அவரது வீட்டைச் சுற்றிலும் கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com