
கரூர் கூட்ட நெரிசலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று (செப். 28) ஒருநாள் முழு கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி இதுவரை 38 பேர் பலியாகியுள்ளனர். மேலும், பலர் கவலைக்கிடமாக சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், பலியானோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளும் இன்று அடைக்கப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்ரமராஜா அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.