
அதிமுக பற்றி பேச விஜய்க்கு உரிமையில்லை என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அதிமுக-பாஜக கூட்டணி பற்றி பேச விஜய்க்கு எந்த உரிமையும் இல்லை. அவர் அரசியலுக்கு புதுசு. இன்னும் விஜய் களத்துக்கே வரவில்லை. எங்கள் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தொகுதிவாரியாக செல்கிறார்.
அவரின் எழுச்சிப் பயணம் வெற்றிகரமாக உள்ளது. ஒவ்வொரு வாரமும் ஒரு கூட்டத்துக்கு மட்டுமே விஜய் செல்கிறார். 50 ஆண்டு பொன்விழா கண்ட அதிமுகவின் வரலாறு விஜய்க்கு தெரியாது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார். முன்னதாக நாமக்கல்லில் இன்று பேசிய விஜய், அதிமுக-பாஜக பொருந்தாக் கூட்டணி என்று விமர்சித்தார்.
மேலும் விஜய் தெரிவித்திருப்பதாவது, மூச்சுக்கு 300 முறை அம்மா அம்மா என்று சொல்லிக்கொண்டு, ஜெயலலிதா சொன்னதை முற்றிலும் மறந்துவிட்டு, தமிழ்நாட்டின் நலனுக்காக என்று ஒரு பொருந்தாக் கூட்டணியை அமைத்தவர்கள் போன்றும் இருக்க மாட்டோம்.
இந்த பாஜக அரசு, தமிழ்நாட்டுக்கு என்ன செய்து விட்டார்கள்? நீட் தேர்வை ஒழித்தார்களா? கல்வி நிதியை முழுவதுமாக கொடுத்தார்களா? தமிழ்நாட்டுக்குத் தேவையான அனைத்தையும் சரியாகச் செய்தார்களா? பிறகு ஏன் இந்த சந்தர்ப்பவாத கூட்டணி என்று புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் உண்மையான தொண்டர்கள் கேட்கின்றனர்.
அதிமுக - பாஜக நேரடி உறவுக்காரர்களின் மீது மக்களிடையே எந்தவொரு நம்பிக்கையும் இல்லை என்பது தெரியும். இந்த திமுக குடும்பமும், பாஜகவுடன் மறைமுக உறவுக்காரர்களாக இருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள். இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தற்போது பதிலளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.