கரூர் பலி: திமுகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைப்பு!
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த நிலையில், இன்று(செப். 28) நடைபெறவிருந்த திமுகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இன்று (செப். 28) திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்படுகின்றன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் பலியாகினர்.
மேலும், 51 பேர் சிகிச்சைப் பெற்று வரும் சூழலில், பலர் கவலைக்கிடமாக சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், திமுக சார்பில் இன்று(செப். 28) நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Following the death of 39 people in a stampede in Karur, it has been announced that all DMK events scheduled for today (Sept. 28) have been postponed.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

