
கரூரில் தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 39 பேர் பலியான சம்பவத்தையடுத்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று(செப். 28) மேற்கொள்ளவிருந்த பிரசாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் பலியாகினர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று(செப். 28) தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாப்பிரெட்டிபட்டி, அரூர் தொகுதிகளில் மேற்கொள்ளவிருந்த பிரசாரம் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் நாளை பாலக்கோடு, பென்னாகரம் தொகுதிகளில் நடைபெறவிருந்த பிரசாரம் நாளை மறுநாளுக்கு மாற்றப்பட்டுள்ளது.
மேலும், இன்று நடைபெறவிருந்த திமுகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.