கொலை முயற்சி, அஜாக்கிரதையாக செயல்பட்டது உள்ளிட்ட 4 பிரிவுகளில் தவெக மீது வழக்கு
கொலை முயற்சி, மரணம் விளைவித்தல், அதிகாரிகள் உத்தரவை மதிக்காதது, அஜாக்கிரதையாக செயல்பட்டது ஆகிய 4 பிரிவுகளின்கீழ் வழக்கு


கரூரில் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 39 பேர் பலியான நிலையில், தவெக நிர்வாகிகள் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூரில் தவெக தலைவர் விஜய் தலைமையில், சனிக்கிழமையில் மேற்கொள்ளப்பட்ட தேர்தல் பிரசாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி, 39 பேர் பலியான நிலையில், தவெகவின் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி.மதியழகன் உள்பட தவெக நிர்வாகிகள் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொலை முயற்சி, மரணம் விளைவித்தல், அதிகாரிகள் உத்தரவை மதிக்காதது, அஜாக்கிரதையாக செயல்பட்டது ஆகிய 4 பிரிவுகளின்கீழ் தவெக நிர்வாகிகள் மீது கரூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதன் காரணமாக, அவர்கள் கைது செய்யப்படவும் வாய்ப்புகள் உள்ளன.
கரூரில் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உள்பட 39 பேர் பலியாகியுள்ளனர். பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, முதல்வர் ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கரூர் விரைந்து சென்று, பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...