
கரூரில் விஜய் பிரசாரத்தின்போது தொண்டர்கள் மின்மாற்றியின் மீது ஏறியபோது மட்டுமே மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கரூர் மின்வாரிய தலைமை பொறியாளர் ராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது நேர்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து ஆட்சியர் தங்கவேல், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், மின்வாரிய தலைமை பொறியாளர் ராஜலட்சுமி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
பிரசாரக் கூட்டத்தில் மின்தடை ஏற்பட்டது குறித்து ராஜலட்சுமி பேசியதாவது,
''விஜய் நிகழ்விடத்திற்கு வருவதற்கு முன்பு அந்த இடத்தில் சிறிதுநேரம் மின்தடை இருந்தது உண்மைதான். மரத்தின்மீதும் மின்மாற்றியின் மீதும் தொண்டர்கள் ஏறியபோது மட்டுமே மின்தடை செய்தோம்.
கிளை முறிந்து லைனில் விழுந்துவிடுவார்களோ, அப்படியாகிவிட்டால் பிரச்னை பெரிதாகிவிடும் என்ற அச்சத்தில் காவலர்கள் உதவியோடு அவர்களை விரைந்து நாங்கள் மீட்டோம். இதற்கிடையே மின்தடை இருந்தது.
மின்மாற்றியில் இருந்து தொண்டர்கள் இறங்கிய பிறகு அப்பகுதியில் மீண்டும் மின்சாரம் கொடுக்கப்பட்டுவிட்டது'' எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | கரூர் பலி: அருணா ஜெகதீசன் விசாரணை தொடங்கியது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.