கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் விசாரிக்க தவெக முறையிட திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கரூரில் தவெக பிரசாரக் கூட்டத்தில் 39 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, தாமாக முன்வந்து நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபானி இல்லத்தில் தவெகவினர் முறையீடு செய்யவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், சிபிஐ அல்லது சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று முறையிடத் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசிடம் ஆளுநர் ஆர்.என். ரவி அறிக்கை கேட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, அடுத்த வாரம் திட்டமிடப்பட்டிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணத்திட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... பகுத்தறிய மறந்த தலைமையும் பாழாய்ப்போன மக்களும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.