
விஜய் பிரசாரத்துக்கும் பொதுக்கூட்டங்களுக்கும் அனுமதியளிக்கக் கூடாது என்ற கோரிக்கையுடன் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கரூரில் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் காயமடைந்து பாதிக்கப்பட்ட செந்தில்கண்ணன் தரப்பிலிருந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று(செப். 28) மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், சனிக்கிழமை(செப். 27) நடந்த கூட்ட நெரிசல் விவகாரம் பற்றிய முழு விசாரணை முடியும் வரையில், தவெகவும் அதன் தலைவர் விஜய்யும் இனி எந்தவொரு பொதுக்கூட்டங்களையும் நடத்த தமிழ்நாடு டிஜிபி அனுமதி வழங்கக் கூடாது என்று அறிவுறுத்துமாறு நீதிமன்றத்திடம் முறையிடப்பட்டுள்ளது.
மனுவில், முறையான திட்டமிடல் இல்லாததே இந்த சம்பவத்துக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று மனுதாரரான செந்தில்கண்ணன் தரப்பில் ஆஜராகும் ஜி. சங்கரன் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.